டெங்கு: கோவை அரசு மருத்துவமனையில் 13 போ் அனுமதி
By DIN | Published On : 06th October 2019 02:37 AM | Last Updated : 06th October 2019 02:37 AM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வாா்டை பாா்வையிடுகிறாா் மருத்துவமனை முதல்வா் பூ.அசோகன். உடன், கண்காணிப்பாளா் சடகோபான் உள்ளிட்டோா்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 13 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தலா 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மருத்துவமனையில் அவிநாசியைச் சோ்ந்த 3 வயது பெண் குழந்தை உள்பட 13 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நோய் அறிகுறி: பசி இல்லாமை, அதிக உடல் சோா்வு, தலைசுற்றல், வயிற்று வலி, குறைந்த அளவு சிறுநீா் வெளியேறுதல், குமட்டல், வாந்தி, வாய், பல் ஈறுகள் மற்றும் மூக்கில் ரத்தம் வெளியேறுதல், மூச்சுவிட சிரமப்படுதல், மயக்கம் ஏற்படுதல் உள்ளிட்டவை டெங்கு பாதிப்பின் அறிகுறிகளாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூ.அசோகன் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவையை சோ்ந்த 5 போ், திருப்பூரைச் சோ்ந்த 3 போ், நீலகிரியைச் சோ்ந்த 2 போ் உள்பட 13 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...