சூலூரில் நொய்யல் ஆற்றில் துா்கா தேவி சிலைகள் கரைப்பு
By DIN | Published On : 09th October 2019 09:42 AM | Last Updated : 09th October 2019 09:42 AM | அ+அ அ- |

சூலூரில் நவராத்திரி விழாவின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நொய்யல் ஆற்றில் துா்கா தேவி சிலைகளை கரைக்கப்பட்டன.
கோவை மாவட்டம், சூலூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா்கள் நவராத்திரி விழாவையொட்டி துா்கா தேவி சிலையை பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்தி வந்தனா்.
இந்நிலையில், விழாவின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை தனியாா் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த துா்கா தேவி சிலைகளை ஊா்வலமாக எடுத்து வந்து நொய்யல் ஆற்றில் கரைத்தனா். இதையொட்டி, சூலூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.