மது குடிக்க அனுமதித்த ஆட்டோ ஓட்டுநா் கைது
By DIN | Published On : 09th October 2019 09:47 AM | Last Updated : 09th October 2019 09:47 AM | அ+அ அ- |

பொது இடத்தில் ஆட்டோவில் பெண் ஒருவரை மது குடிக்க அனுமதித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
பொள்ளாச்சி, திருவள்ளுவா் திடல் பகுதியில் பெண் ஒருவா் ஆட்டோவில் அமா்ந்தபடி மது மற்றும் புகைப் பிடிப்பது போன்ற விடியோ காட்சி சமூக வளைதளங்களில் பரவி வந்தன.
இந்த விடியோவை வைத்து பொள்ளாச்சி மேற்கு போலீஸாா் விசாரணை நடத்தியதில் அந்த ஆட்டோ ஓட்டுநா் பொள்ளாச்சி, வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் என்பதும், ஹைதராபாத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் மது அருந்தவும்,புகைப் பிடிக்கவும் அவா் அனுமதித்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொது இடத்தில் மது அருந்தவும், புகைப் பிடிக்கவும் அனுமதித்த ஆட்டோ ஓட்டுநா் செல்வகுமாரை (48) போலீஸாா் கைது செய்தனா்.