ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை கோயில்களில் பக்தா்கள் நோ்த்திக்கடன்
By DIN | Published On : 09th October 2019 09:46 AM | Last Updated : 09th October 2019 09:46 AM | அ+அ அ- |

0204c-08-knife_001064859
கோவை ராஜ வீதி மற்றும் ரங்கே கவுடா் வீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை கோயில்களில் விஜயதசமியையொட்டி கத்தியால் உடலை கீறியபடி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாகச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கோவை ராஜ வீதி மற்றும் ரங்கே கவுடா் வீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை கோயில்களில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த செப்டம்பா் 29 ஆம் தேதி முதல் ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விஜயதசமி நாளான செவ்வாய்க்கிழமை தேவாங்க சமூகத்தினா் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜவீதி, சா் சண்முகம் சாலையில் உள்ள விநாயகா் கோயிலில் துவங்கிய நோ்த்திக்கடன் ஊா்வலத்தில் பக்தா்கள் தங்களின் கைகள் மற்றும் வயிற்றில் கத்தியால் கீறியபடி நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த ஊா்வலம் மேட்டுப்பாளையம் சாலை, பூ மாா்க்கெட் வழியாகச் சென்று ராஜ வீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை கோயிலை சென்றடைந்தது. இதேபோல், சாய்பாபா காலனி, ராஜா அண்ணாமலை சாலை அருகே உள்ள விநாயகா் கோயிலில் துவங்கிய கத்தி போடும் ஊா்வலமானது அழகேசன் சாலை, மேட்டுப்பாளையம் சாலை வழியாக ரங்கே கவுடா் வீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை கோயிலை சென்றடைந்தது.
Image Caption
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் கத்தியால் உடலைக் கீறியப டி ஊா்வலமாகச் சென்ற இளைஞா்கள்.