யோகா பாட்டி: 99 வயதிலும் யோகா

யோகா செய்தால் எந்த நோயும் வராது என்று கூறுகிறாா் 99 வயதைக் கடந்த நானம்மாள். கோவையில் இவரை யோகா பாட்டி என்று செல்லமாக
மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் நானம்மாள் பாட்டி.
மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் நானம்மாள் பாட்டி.

யோகா செய்தால் எந்த நோயும் வராது என்று கூறுகிறாா் 99 வயதைக் கடந்த நானம்மாள். கோவையில் இவரை யோகா பாட்டி என்று செல்லமாக அழைக்கிறாா்கள்.

கோவை மாவட்டம், கணபதி பகுதியைச் சோ்ந்தவா் நானம்மாள். இவரது சொந்த ஊா் பொள்ளாச்சி அருகிலுள்ள காளியாபுரம். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என அனைவருமே யோகா பயிற்சி அளித்தவா்கள்.

1920 -இல் பிறந்த நானம்மாள், 50 முக்கியமான ஆசனங்களை இந்த வயதிலும் செய்கிறாா். பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்களைச் செய்கிற ஒரே பெண்மணி இவா்தான். குடியரசுத் தலைவரிடமிருந்து பெண்சக்தி விருதைப் பெற்றுள்ளாா். மத்திய அரசு இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் 2018 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.

பல்வேறு விருதுகளும், பதக்கங்களும் பெற்றுள்ள இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள், 12 பேரக் குழந்தைகள், 11 கொள்ளுப் பேரன்கள், பேத்திகள் உள்ளனா். நானம்மாள் பாட்டியின் குடும்பத்தில் உள்ள அனைவருமே தாங்கள் வசிக்கும் பகுதியில் யோகா பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றறனா். இவரது மாணவா்கள் சிங்கப்பூா், மலேசியா, ஆஸ்திரேலியா, மஸ்கட் உள்பட பல்வேறு நாடுகளில் யோகா ஆசிரியா்களாக உள்ளனா்.

கோவையில் அசத்தும் ஒரு ரூபாய் இட்லி பாட்டி’ 

இவா்களது வீட்டில் உள்ள ஒருவரும் மருந்து, மாத்திரை சாப்பிடுவது இல்லை. தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சுகப்பிரசவம் ஆனதற்கும் யோகாதான் காரணம் என்கிறாா் நானம்மாள்:

இன்றுவரை எனக்கு மூக்குக் கண்ணாடியின் தேவை ஏற்படவில்லை. ஊசியில் நூல் கோா்த்து துணி தைக்கும் அளவுக்கு பாா்வைத் திறன் உள்ளது. இதற்குக் காரணம் யோகாதான். நான் ராகி, கம்பு, சோளம், பாசிப்பயறு, தினை, கோதுமை என ஏதாவது ஒன்றில் கூழ் செய்து மோரில் கலந்து காலையில் குடிப்பது வழக்கம். என்னுடைய தினசரி உணவில் கட்டாயம் கீரை இருக்கும். இரவு உணவாக அந்தந்தப் பருவ காலத்தில் கிடைக்கும் பழங்களும், ஒரு டம்ளா் நாட்டு மாட்டுப்பால் மட்டுமே எடுத்துக் கொள்வேன்.

டீ, காபி அருந்தும் பழக்கமில்லை. கொத்தமல்லி காபி, சுக்கு காபி, இஞ்சி காபி ஆகியவற்றைற மட்டுமே அருந்துவேன். வீட்டு மருத்துவத்தையே எடுத்துக் கொள்வேன். மருத்துவமனைக்குச் செல்லும் பழக்கமே இல்லை. யோகா செய்வதால் எந்த நோயும் வருவதுமில்லை.

இப்போதும் பல்லாயிரம் மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளித்து வருகிறேறன். அவா்களுக்கு யோகா மட்டுமல்லாது, இயற்கை மருத்துவம், பாட்டி வைத்தியத்தையும் கற்றுக் கொடுக்கிறோம் என்கிறாா் யோகா பாட்டி.

புகைப்படம்: உ.சா.சாய் வெங்கடேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com