சாலை மையத் தடுப்பில் அரசுப் பேருந்து மோதல்: ஓட்டுநர் காயம்
By DIN | Published On : 02nd September 2019 04:50 AM | Last Updated : 02nd September 2019 04:50 AM | அ+அ அ- |

சூலூர் அருகே சாலை மையத் தடுப்பில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அதன் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தார்.
கோவையிலிருந்து திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றது. இப்பேருந்து சூலூரை அடுத்த காங்கேயம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலை மையத் தடுப்பில் மோதியது. இதில் பேருந்து ஓட்டுநருக்கு தோள்பட்டையில் பலத்த அடிபட்டது. சாலை மையத் தடுப்பில் எச்சரிக்கை வர்ணம் பூசாததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிகிறது. மேலும் எதிரே வந்த வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளி, அரசு அனுமதித்த அளவுக்கு மிக அதிகமாக இருந்ததும் விபத்துக்கு காரணம் என பேருந்து பயணிகள் கூறினர்.
இந்த விபத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் அருகில் நடைபெற்றுள்ளது. எனவே இனியாவது அதிக ஒலி, ஒளி எழுப்பும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். காயமடைந்த பேருந்து ஓட்டுநர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.