அரசுப் பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
By DIN | Published On : 11th September 2019 06:42 AM | Last Updated : 11th September 2019 06:42 AM | அ+அ அ- |

தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி, கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையம் வட்டார குழந்தைகள் நல உதவித் திட்ட அலுவலர் ஷீலா தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை சகாயமேரி தொடக்கிவைத்தார்.
இதில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும், மற்ற மாணவர்களுக்கும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் தா.பிளாரன்ஸ் பரிசு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி மைய பணியாளர் எம்.சுதா செய்திருந்தார்.