காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து வால்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு காவல் துறை அதிகாரிகள்  விளக்கமளித்தனர்.

காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து வால்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு காவல் துறை அதிகாரிகள்  விளக்கமளித்தனர்.
வால்பாறை காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆய்வாளர் முருகேசன் துவக்கிவைத்து பேசினார். 
இதில், முதல் தகவலறிக்கை என்றால் என்ன? எதற்காக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது? காவல் நிலையத்தில் உள்ள கைதிகளின் அறை, ஆயதங்கள் வைக்கப்படும் அறை, விசாரணை அறை ஆகியவை குறித்து விளக்கி கூறப்பட்டது. 
இதே போல நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவின் காட்சிகளை காண்பித்தும், இதன் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை எளிதாகப் பிடிக்க முடிவது குறித்தும் ஆய்வாளர் மாணவர்களிடம் கூறினார். 
உதவி ஆய்வாளர்கள் உதயசூரியன், முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com