கைதியிடம் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல்
By DIN | Published On : 11th September 2019 06:40 AM | Last Updated : 11th September 2019 06:40 AM | அ+அ அ- |

கோவை மத்திய சிறையில் போலீஸார் நடத்திய சோதனையில் கைதி ஒருவரின் அறையில் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர் விஜயன் (34). இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் தனது அறையில் செல்லிடப்பேசி வைத்து பேசி வருவதாக சிறை அதிகாரிகளுக்கு
தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, அறையில் இருந்த கழிவறையில் செல்லிடப்பேசியை விஜயன் ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் பறிமுதல் செய்து விஜயனிடம் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் சிறை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.