நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்குப் பாராட்டு
By DIN | Published On : 11th September 2019 06:37 AM | Last Updated : 11th September 2019 06:37 AM | அ+அ அ- |

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் 2018-19 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை கோவை, குனியமுத்தூர் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஸ்ரீராஜராஜேஸ்வரிக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற அவருக்கு பள்ளி சார்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சுப்புலட்சுமி, பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் பெரியசாமி, முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.