மாசாணியம்மன் கோயிலில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு
By DIN | Published On : 11th September 2019 06:40 AM | Last Updated : 11th September 2019 06:40 AM | அ+அ அ- |

ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாசாணியம்மன் கோயிலில் அங்கன்வாடி பணியாளர்களின் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
குழந்தைகளுக்கு தாய்ப் பால் வழங்க வேண்டும். சத்தான உணவுகள் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் கோயில் கோபுரம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் கும்மியடிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
கோயிலுக்கு வந்த பெண்களிடம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்வில் ஆனைமலை வட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பாண்டிச்செல்வி, மேற்பார்வையாளர் பாக்கியலட்சுமி ஆகியோர்
உடனிருந்தனர்.