வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
By DIN | Published On : 11th September 2019 06:42 AM | Last Updated : 11th September 2019 06:42 AM | அ+அ அ- |

செட்டிபாளையம் அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரைப் பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் வருகின்றனர்.
கோவை அருகே செட்டிபாளையம், சங்கமம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (30). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ராஜேஷ்குமார் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
பின்னர் திங்கள்கிழமை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், பீரோவில் வைத்திருந்த இரண்டரைப் பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.