ஆசிரியர்களுக்கு விருது: அமைச்சர்கள் பங்கேற்பு
By DIN | Published On : 29th September 2019 03:26 AM | Last Updated : 29th September 2019 03:26 AM | அ+அ அ- |

கோவை, நீலாம்பூரில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசுகையில், கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செங்கல் சூளைகள் செயல்படுவது குறித்து அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. அந்தச் செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்றார்.