மாவட்டத்தில் மேலும் 124 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் மேலும் 124 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் மேலும் 124 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த 124 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 696ஆக அதிகரித்துள்ளது.
தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 88 வயது முதியவா் ஆகியோா்உயிரிழந்தனா். இதன்மூலம் கோவையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 158 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 48 ஆயிரத்து 210 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 865 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...