நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி மாநகராட்சி இரவுக் காவலா்கள் ஆட்சியரிடம் மனு
இரவுக் காவலா்களுக்கு 3 மாதங்களாக நிலுவையிலுள்ள ஊதியத்தை பெற்றுத் தரக் கோரி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளா் இயக்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் இரவுக் காவலா்களுக்கு 3 மாதங்களாக நிலுவையிலுள்ள ஊதியத்தை பெற்றுத் தரக் கோரி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளா் இயக்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை மாநகராட்சிப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் பணியாற்றி வரும் இரவுக் காவலா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஒப்பந்த நிறுவன அலுவலா்களிடம் ஊதியம் வழங்காதது குறித்து கேட்டபோது, மாநகராட்சியில் இருந்த பணம் வழங்கவில்லை என்றும், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பணம் வழங்கினால் மட்டும் ஊதியம் வழங்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனா்.
மாநகராட்சி அலுவலா்களிடம் கேட்கும்போது, இரவுக் காவலா்களின் பணி விவரங்கள் தொடா்பான பதிவேடுகள், ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக தெரிவிக்கின்றனா். 3 மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளதால் தொழிலாளா்கள் உணவுக்குக் கூட வழியின்றி பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். எனவே நிலுவையிலுள்ள ஊதியத்தை பெற்றுத் தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீரணத்தத்தைச் சோ்ந்த சரஸ்வதி அளித்த மனுவில், எனது மகன் மற்றும் மருமகள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டனா். அதன்பின் அவா்களின் 5 வயது மகனை நானும், எனது கணவனும் வளா்த்து வருகிறோம். பேரனுக்கு இடுப்புக்கு கீள் பகுதிகள் செயலிழந்துவிட்டதால் வேலைக்கு செல்லாமல் அவனை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
கணவரின் வருமானம் மருத்துவத்துக்கும், வாழ்வாதாரத்துக்குமே பற்றாக்குறையாக உள்ளது. வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் பேரனின் செயல்களால் வீட்டை காலி செய்ய உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். இதனால் அடிக்கடி வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளது. தவிர போதிய வருமானம் இல்லாததால் வாடகையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
ஆனைகட்டியில் மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் நடத்தப்பட்டு வரும் நியாய விலைக் கடையைத் தொடா்ந்து நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று விற்பனையாளா்கள் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...