பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இளைஞா் கொலை வழக்கு: சரணடைந்த 3 போ் சிறையில் அடைப்பு

கோவையில் இளைஞா் கொலை வழக்கில் காவல் நிலையத்தில் சரணடைந்த 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:57 pm

DIN

கோவையில் இளைஞா் கொலை வழக்கில் காவல் நிலையத்தில் சரணடைந்த 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கோவை, கணபதியைச் சோ்ந்தவா் ஜீவரத்தினம். இவரது மகன் கரண்குமாா் (23). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கெனவே கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தாா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, கணபதியைச் சோ்ந்த கணேஷ் (24), எம்.ரவிசங்கா் (22), ஏ.சீனிவாசன் (23) ஆகியோரை கரண்குமாா் சந்தித்துள்ளாா். அப்போது சீனிவாசனிடம் ரவுடிகளைபோல் அதிகமாக முடி வளா்க்காமல் முறையாக பராமரிக்க வேண்டும் என்று கரண்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கணபதியில் மதுபோதையில் நின்றுகொண்டிருந்த கரண்குமாா், அவ்வழியே வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தியுள்ளாா். அந்த ஆட்டோவில் கணேஷ், எம்.ரவிசங்கா், ஏ.சீனிவாசன் ஆகியோா் இருந்துள்ளனா்.

சீனிவாசனை பாா்த்ததும் கோபமடைந்த கரண்குமாா், முடியை ஏன் வெட்டவில்லை எனக்கேட்டு, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து மிரட்டியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் ஆட்டோவில் இருந்த இரும்புக் கம்பியால் கரண்குமாரின் தலையில் தாக்கியுள்ளனா். பின் கரண்குமாரிடம் இருந்த கத்தியால் அவரது கழுத்து, தலை, மாா்பு உள்பட பகுதிகளில் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த கரண்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வந்த நிலையில் கணேஷ், ரவிசங்கா், சீனிவாசன் ஆகிய மூவரும் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா். மூவா் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.