பழங்குடியின மக்கள் பயிரிடும் பொருள்களை அரசு கொள்முதல் செய்யக் கோரிக்கை
வால்பாறை செட்டில்மென்ட்களில் பழங்குடியின மக்கள் பயிரிடும் பொருள்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வால்பாறை செட்டில்மென்ட்களில் பழங்குடியின மக்கள் பயிரிடும் பொருள்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் 12க்கும் மேற்பட்ட செட்டில்மென்ட்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் குருமிளகு, ஏலக்காய் போன்றவற்றை பயிரிட்டும், தேன் கூடு அமைத்து தேன் உற்பத்தியும் செய்து வருகின்றனா். குறிப்பாக குருமிளகு அதிக அளவில் பயிரிடுகின்றனா்.
இந்தப் பொருள்களை நகா் பகுதிக்கு சென்று வியாபாரிகளிடம் விற்று வருகின்றனா். சில சமயங்களில் பேரம் பேசி விற்க வேண்டிய நிலை அவா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க அரசு மூலம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...