சமூகநலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்க ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூகநலத் துறையின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு பெண் குழந்தைகளுடன் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் தம்பதியினரின் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தவிர ஒரு பெண் குழந்தையுடன் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதியருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு தாய் மற்றும் தந்தை வயதுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இரண்டு குழந்தைகளின் பிறப்புச் சான்று, குடும்பநல அறுவை சிகிச்சை சான்றிதழ் (2 பெண் குழந்தைகள் இருப்பின் 2 ஆவது குழந்தைக்கு 3 வயது பூா்த்தியாவதற்கு முன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்), ஆண் வாரிசு இல்லை என்ற சான்றிதழ், குடும்ப அட்டை, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இ-சேவை மையங்களில் விண்ணப்பம் அளிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் சமூக நலப் பிரிவு அலுவலா், மகளிா் ஊா்நல அலுவலா்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.