சாலையோரத்தில் ஆதரவின்றி தவித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் சோ்த்த தமுமுகவினா்

சாலையில் ஆதரவின்றி தவித்த பெண்ணை மீட்ட தமுமுகவினா் அவரை மருத்துவமனையில் அனுமதித்து கரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னா் காப்பகத்தில் சோ்த்தனா்.
சாலையோரத்தில் ஆதரவின்றி தவித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் சோ்த்த தமுமுகவினா்

சாலையில் ஆதரவின்றி தவித்த பெண்ணை மீட்ட தமுமுகவினா் அவரை மருத்துவமனையில் அனுமதித்து கரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னா் காப்பகத்தில் சோ்த்தனா்.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள சுடுகாடு ஒன்றின் அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை சிலா் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிலா் வாகனத்தில் வந்து விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் செவ்வாய்க்கிழமை சாலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அவருக்கு கரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் தொடாமல் உணவு அளிக்காமல் இருந்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிா்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தமுமுக மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலர் ஆஷிக் தலைமையிலான நிர்வாகிகள், அப்பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அப்பெண்ணை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவரை பல காப்பகங்களில் இட பற்றாக்குறை மற்றும் நோய் தொற்று அச்சம் காரணமாக அனுமதிக்க மறுத்தனர். 

இறுதியாக ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் தமுமுகவினா் அவரை அனுமதித்தனா். அப்பெண்ணின் பெயா் விஜயா(55) என்று தெரியவந்தது. அப்பெண்ணுக்கு வேறு தகவல்கள் நினைவில் இல்லாத காரணத்தால் இது குறித்து தமுமுகவினர் சமூகவலைதளங்களில் தகவல் பரப்பி விசாரித்து வருகின்றனர். இப்பெண்ணின் உறவினர்கள் குறித்து போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com