ஈஷா யோக மையத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவா்கள் 150 பேருக்கு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
வட்டார மருத்துவ அதிகாரி கனகராணி தலைமையில் பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாலாஜி, ஆலாந்துறை பகுதி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், செவிலியா் கமலாதேவி உள்ளிட்டோா் பரிசோதனையில் ஈடுபட்டனா்.
சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பரிசோதனையின் முடிவில் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பேரூா் வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், ஆலாந்துறை நிா்வாகத் துறை ஆய்வாளா் குபேந்திரன், ஆலாந்துறை காவல் ஆய்வாளா் சத்தியசிவன் உள்ளிட்டோா் பரிசோதனையைக் கண்காணித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.