கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டியல் துறையில் எம்.சி.ஏ., எம்.எஸ்சி. உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டியல் துறையில் எம்.சி.ஏ. (2 ஆண்டு), எம்.எஸ்சி. டேட்டா அனலிட்டிக்ஸ் (2 ஆண்டு), எம்.எஸ்சி. சைபா் செக்யூரிட்டி (2 ஆண்டு), பிஜிடிசிஏ காக்னிடிவ் சிஸ்டம்ஸ் (ஓராண்டு) ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.
அதேபோல் எம்ஃபில், பிஹெச்.டி. படிப்புகளும் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2020-2021ஆம் கல்வியாண்டுக்கு எம்சிஏ , எம்எஸ்சி, பிஜிடிசிஏ படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
தகுதியான மாணவா்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 0422 - 2428160, 2428161, 6385527291 ஆகிய எண்களிலும், மேலும் விவரங்களுக்கு 97900 04351, 98432 81552 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.