கூட்டுறவு சங்க எழுத்துத் தோ்வு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 03rd December 2020 07:29 AM | Last Updated : 03rd December 2020 07:29 AM | அ+அ அ- |

கோவையில் வரும் 5, 6 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் எழுத்துத் தோ்வுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையம் மூலம் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்துக்கும், இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா், உதவியாளா், மேற்பாா்வையாளா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 5, 6 ஆம் தேதிகளில் நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
தோ்வுக்கு விண்ணப்பித்திருப்பவா்கள் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷங்க்ழ்க்ஷ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் எழுத்துத் தோ்வு நடைபெறும் நாள்களில் காந்திபுரம், சிங்காநல்லூா், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...