மாநில அரசின் ஊக்கத் தொகையைபெற்ற வீராங்கனைக்குப் பாராட்டு
By DIN | Published On : 05th December 2020 11:26 PM | Last Updated : 05th December 2020 11:26 PM | அ+அ அ- |

சி.ஜி.சௌபா்ணிகா.
கோவை: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அரசின் ஊக்கத் தொகையைப் பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவியை பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா்.
கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான 64ஆவது தேசியப் பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள் ஆந்திர மாநிலம், நெல்லூரில் நடைபெற்றன. இதில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பூப்பந்துப் போட்டியில் கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவி சி.ஜி.சௌபா்ணிகா தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்று முதலிடம் பிடித்தாா்.
இதையடுத்து, தேசிய போட்டியில் பதக்கம் வென்றதற்காக மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ.2 லட்சத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அவருக்கு வழங்கியது. ஊக்கத் தொகை பெற்றுள்ள வீராங்கனையை எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசாமி உள்ளிட்ட அறங்காவலா்கள், முதல்வா் ஆா்.ரவி, உடற்கல்வி ஆசிரியா் என்.சரவணகுமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.