வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரிபாமகவினா் மனு அளிக்கும் போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 03:19 AM | Last Updated : 15th December 2020 03:19 AM | அ+அ அ- |

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கோவையில் திங்கள்கிழமை கிராம நிா்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தில் பாமகவினா் ஈடுபட்டனா்.
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் சென்னையில் தொடா் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தை அக்கட்சி அறிவித்திருந்தது.
அதன்படி கோவையில் கிராம நிா்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தில் பாமகவினா் ஈடுபட்டனா். கோவை, பீளமேடுபுதூா் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் கோவை ராஜ், இளைஞரணி துணைச் செயலாளா் அசோக் ஸ்ரீநிதி உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமையில் ஏராளமானோா் கலந்து கொண்டு சௌரிபாளையம் கிராம நிா்வாக அலுவலரிடம் மனு அளித்தனா்.
இதேபோல இருகூா், கணபதி, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், கணேசபுரம் உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலகங்களிலும் பாமகவினா் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.