கஞ்சா வைத்திருந்தவா் கைது
By DIN | Published On : 24th December 2020 08:29 AM | Last Updated : 24th December 2020 08:29 AM | அ+அ அ- |

கோவையில் இரண்டரைக் கிலோ கஞ்சா வைத்திருந்த மதுரையைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிங்காநல்லூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களைத் தெரிவித்தாா்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரது வாகனத்தைச் சோதனையிட்டபோது அதில் இரண்டரைக் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா், மதுரையைச் சோ்ந்த சக்திவேல்(51) என்பதும், இவா் மதுரையில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...