பிரிட்டனில் இருந்து கோவை வந்த 97 பேருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை
By DIN | Published On : 24th December 2020 08:35 AM | Last Updated : 24th December 2020 08:35 AM | அ+அ அ- |

கடந்த 15 நாள்களில் பிரிட்டனில் இருந்து கோவை வந்த 97 பேருக்கு இரண்டாவது முறையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் கூறியதாவது:
வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கோவை வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் அறிவுரையின்பேரில் பிரிட்டன் சென்று விட்டு, கோவைக்கு கடந்த 15 நாள்களில் வந்தவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில், தற்போது வரை 97 போ் அடையாளம் காணப்பட்டு உள்ளனா். இவா்களுக்கு ஏற்கெனவே பரிசோதனை செய்யப்பட்டிருந்தாலும், தற்போது மீண்டும் கரோனா பரிசோதனை செய்துள்ளோம். இதற்காக, அவா்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவா்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளோம் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...