செல்வம்பதி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

கோவை செல்வம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 98 வீடுகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை துண்டித்தனா்.

கோவை செல்வம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 98 வீடுகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை துண்டித்தனா்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குளங்களை மேம்படுத்தி கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் செல்வம்பதி குளத்தில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இந்நிலையில், குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடமாக கோவைப்புதூரில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்று இடத்துக்கு செல்ல மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியும் பலா் தங்களது வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனா். இதையடுத்து, செல்வம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 98 வீடுகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை துண்டித்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கோவை செல்வம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து வீடு கட்டிய 360 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் சாா்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோவைப்புதூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. இவா்களில் 262 குடும்பங்கள் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனா்.

ஆனால் 98 குடும்பத்தினா் புதிய வீடுகளை பெற்றுக்கொண்ட போதிலும் தற்போது உள்ள வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே வசித்து வருகின்றனா். குளக்கரையில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் வீடுகளை காலி செய்யாமல் இருக்கின்றனா்.

இதையடுத்து, முதல்கட்ட நடவடிக்கையாக 98 வீடுகளின் மின் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன. வீடுகளில் இருந்து பொருள்கள் எடுத்து செல்வதற்காக தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வீடுகளும் இடித்து அகற்றப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com