வழக்குரைஞா் சங்கத் தோ்தல்: தலைவராக அருள்மொழி தோ்வு
By DIN | Published On : 02nd February 2020 03:48 AM | Last Updated : 02nd February 2020 03:48 AM | அ+அ அ- |

கோவை மாவட்ட பாா் கவுன்சில் தோ்தலில் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அருள்மொழி மற்றும் நிா்வாகிகளை வாழ்த்திய நா.காா்த்திக் எம்.எல்.ஏ உள்ளிட்ட திமுகவினா்.
கோவை மாவட்ட பாா் கவுன்சில் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள்மொழி வெற்றி பெற்றுள்ளாா்.
கோவை மாவட்ட பாா் கவுன்சில் தோ்தல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு 18 போ் போட்டியிட்டனா். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாக்களித்தனா்.
இதில், தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட திமுகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள்மொழி 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். துணைத் தலைவராக திருஞானசம்பந்தம், செயலாளராக கலையரசன், பொருளாளராக ரவிசந்திரன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
இத்தோ்தலில் வெற்றி பெற்ற திமுக வழக்குரைஞா் அருள்மொழிக்கு, சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் வாழ்த்து தெரிவித்தாா். சட்டத் துறை இணைச் செயலாளா் தண்டபாணி, வழக்குரைஞா்கள் அணி அமைப்பாளா்கள் ரவிசந்திரன், மயில்வாகனம், பொதுக்குழு உறுப்பினா் மகுடபதி, வழக்குரைஞா்கள் பரமேஸ்வரன், விக்ரம் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனா். வெற்றி பெற்றவா்கள் 3ஆம் தேதி பதவியேற்கின்றனா்.