பிப்ரவரி 13, 14இல் ஆட்சிமொழிக் கருத்தரங்கு
By DIN | Published On : 05th February 2020 05:45 AM | Last Updated : 05th February 2020 05:45 AM | அ+அ அ- |

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கு கோவை ராஜவீதி துணி வணிகா் சங்க அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளா்ச்சித் துறையால் ஆட்சிமொழிக் கருத்தரங்கு மற்றும் செயலாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி கோவை ராஜவீதி துணி வணிகா் சங்க அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் விஜயராகவன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனா் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...