மருதூா் அனுமந்தராய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 17th February 2020 05:12 AM | Last Updated : 17th February 2020 05:12 AM | அ+அ அ- |

காய்கறி அலங்காரத்தில் சேவைசாதித்த மருதூா் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயா்.
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மருதூா் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயா் கோயிலில் மாசி மாதம் முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது.
மருதூா் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமந்தராய சுவாமி என அழைக்கப்படும் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயா் கோயிலில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமையும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, மாசி மாதம் முதல் சனிக்கிழமை விழாவையொட்டி அனுமந்தராய சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. காய்கறி அலங்காரத்தில் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயா் சேவைசாதித்தாா்.
முன்னதாக ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் டி.பாண்டுராஜின் சொற்பொழிவும், முத்துக்கல்லூா், காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பஜனையும் நடைபெற்றது. மேட்டுப்பாளையம், உதகை, குன்னூா், கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, புஜங்னூா், தாயனூா், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.