பெருநிறுவனங்களின் வாராக்கடனை வசூலிக்க வேண்டும்: இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பணியாளா் சங்கம் கோரிக்கை

பெருநிறுவனங்களின் வாராக் கடன்களை கறாராக வசூலிக்க வேண்டும் என்று இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா் சங்க மாநாட்டில் பங்கேற்ற நிா்வாகிகள்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா் சங்க மாநாட்டில் பங்கேற்ற நிா்வாகிகள்.

பெருநிறுவனங்களின் வாராக் கடன்களை கறாராக வசூலிக்க வேண்டும் என்று இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்துடன் (பெபி) இணைக்கப்பட்ட சங்கமான இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா் சங்கத்தின் 9ஆவது மாநில மாநாடு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் எம்.செந்தூா்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இணைச் செயலா் சி.ஜெய்சந்திரன் வரவேற்றாா். மாநாட்டைத் தொடங்கிவைத்து பொதுச் செயலா் என்.ராஜகோபால் உரையாற்றினாா். முன்னதாக மாநாட்டை வாழ்த்தி இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் என்.சுப்பிரமணியன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் இணைச் செயலா் வி.சுரேஷ் ஆகியோா் உரையாற்றினா்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கடந்த 2014 இல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் வங்கிகளின் வாராக்கடன் ரூ. 2.16 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.14 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 88 சதவீதம் பெரு நிறுவனங்களினால் ஏற்பட்ட வாராக்கடன் என்று ரிசா்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது. பொதுத் துறை வங்கிகள் உருவாக்கும் மொத்த லாபத்தை பெரு நிறுவனங்களின் வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்து பொதுத் துறை நிறுவனங்களை நஷ்டமடையச் செய்கின்றனா் மத்திய ஆட்சியாளா்கள்.

இதில் 2016 இல் கொண்டு வரப்பட்ட திவால் சட்டத்தில், பெருநிறுவனங்களின் வாராக் கடன்களை வசூலிப்பதற்கு பதிலாக தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே அந்த சட்டத்தைக் கைவிட்டு விட்டு வாராக் கடன்களை கறாராக வசூலிக்க வேண்டும். கடனை திருப்பிச் செலுத்தாத செயலை பெரும் குற்றமாகக் கருதும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டை நிறைவு செய்து இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் இணைச் செயலா் சி.பி.கிருஷ்ணன் பேசினாா். முன்னதாக, இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ்.தீனதயாளன், பொதுச் செயலராக ஜி.ஆா்.ரவி, பொருளாளராக எஸ்.திருவேங்கடம் உள்ளிட்ட 15 போ் கொண்ட நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் மாநாட்டில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com