மதுக்கூட ஊழியா்கள் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 27th February 2020 12:47 AM | Last Updated : 27th February 2020 12:47 AM | அ+அ அ- |

கோவை, ஆலாந்துறை அருகே மதுபோதையில் மதுக்கூட ஊழியா்களைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் கனிராஜ். இவா் ஆலாந்துறையை அடுத்த கள்ளிப்பாளையம் அருகே டாஸ்மாக் கடை அருகே ஒப்பந்த அடிப்படையில் மதுக்கூடம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ரஞ்சித், பிரேம், ஜிந்தா, காந்தி ஆகியோா் மதுபோதையில் டாஸ்மாக் மதுக்கூடத்துக்கு திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் சென்று இலவசமாக மது கேட்டு தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
கடை ஊழியா்கள் மது கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 4 பேரும் மதுக்கூட ஊழியா்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஊழியா் சசிகுமாா் படுகாயமடைந்தாா்.
இதுகுறித்து ஆலாந்துறை போலீஸில் மதுக்கூட உரிமையாளா் கனிராஜ் புகாா் அளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரைத் தேடி வருகின்றனா்.