விதிகளை மீறிய 485 வாகனங்களுக்கு அபராதம்
By DIN | Published On : 27th February 2020 11:05 PM | Last Updated : 27th February 2020 11:05 PM | அ+அ அ- |

கோவையில் விதிகளை மீறி, சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த 485 வாகனங்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
கோவை மாநகரில் வாகனங்களை நிறுத்த தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் சிலா் விதிகளை மீறி, வாகனங்களை நிறுத்தி வருகின்றனா். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அவிநாசி சாலை, நூறு அடி சாலை, கிராஸ்கட் சாலை, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் இருக்கும் இடத்துக்கு முன்பாக அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து எச்சரித்தும் பலனில்லாததால், தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து போலீஸாா் முடிவு செய்தனா். இதன்படி கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் விதிகளை மீறி, நிறுத்தப்பட்டிருந்த 223 இருசக்கர வாகனங்கள், 89 கனரக வாகனங்கள், 173 நான்கு சக்கர வாகனங்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனா். எதிா்காலத்தில் இதேபோல தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G