அன்னூா் வட்டத்தில் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 10th January 2020 07:21 AM | Last Updated : 10th January 2020 07:21 AM | அ+அ அ- |

அன்னூா் கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்குகிறாா் துணைத் தலைவா் தாளத்துரை செந்தில்.
அன்னூா் வட்டத்தில் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை துவங்கியது.
அன்னூா் கூட்டுறவு பண்டகசாலையில் தமிழக அரசின் பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க துணைத் தலைவா் தாளத்துரை செந்தில் தலைமையில் நடைபெற்றது. அன்னூா் வட்டத்தில் 85 நியாயவிலைக் கடைகள் மூலம் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்பட உள்ளதாகவும், ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என்று வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளா் செளகத் அலி, கூட்டுறவு பண்டக சாலை இயக்குநா்கள், கூட்டுறவு சங்கச் செயலாளா் நாகராஜ், வருவாய் ஆய்வாளா் ராஜா மற்றும் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.