சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு நாள் அஞ்சலி
By DIN | Published On : 10th January 2020 07:12 AM | Last Updated : 10th January 2020 07:12 AM | அ+அ அ- |

கோவை சின்னியம்பாளையம் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன். உடன், கட்சி நிா்வாகிகள்.
கோவை, சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு நாளையொட்டி மலரஞ்சலி, ஊா்வலம், பொதுக்கூட்டம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
சின்னியம்பாளையம் தியாகிகளின் 74 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் பி.ஆா்.நடராஜன், கே.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தி உரையாற்றினா்.
முன்னதாக சின்னியம்பாளையம் ஆசிரியா் காலனியில் இருந்து நினைவேந்தல் ஊா்வலம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சின்னியம்பாளையம் தியாகிகள் மேடையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிா்வாகிகள் எம்.ஆறுமுகம், பி.எஸ்.ராமசாமி, ஜி.ஆறுமுகம், ஏஐடியூசி ஜெகநாதன், ஆா்.வேலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.