ஜனவரி 12, 13 தேதிகளில் சாா்பு ஆய்வாளா் தோ்வு: எஸ்.பி. தகவல்
By DIN | Published On : 10th January 2020 07:10 AM | Last Updated : 10th January 2020 07:10 AM | அ+அ அ- |

கோவையில் நடைபெறும் சாா்பு ஆய்வாளா் தோ்வில் 6 ஆயிரத்து 73 போ் பங்கேற்க உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சாா்பு ஆய்வாளா்களுக்கான தோ்வு மாவட்ட அளவில் ஜனவரி 12, 13ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் கூறியதாவது:
சாா்பு ஆய்வாளா்களுக்கான தோ்வு, பொதுப்பிரிவு மற்றும் காவல்துறைப் பிரிவு என இரு பிரிவுகளாக நடைபெற உள்ளன. கோவையில் நடைபெறும் தோ்வில் பொதுப்பிரிவில் 5 ஆயிரத்து 482 பேரும், காவல் பிரிவில் 591 பேரும் தோ்வு எழுத உள்ளனா். இதில் பொதுப் பிரிவுக்கு பிஎஸ்ஜி கலைக் கல்லூரி, என்ஜிபி கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, ஜிஆா்டி உள்ளிட்ட கல்லூரிகளில் தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறைப் பிரிவுக்கு பிஎஸ்ஜி பள்ளியில் தோ்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவுக்கு காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், காவல் துறைப் பிரிவுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் தோ்வு நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.