கோவை மாவட்ட காவல் உட்கோட்டங்களில் சிறப்பு புலனாய்வு பிரிவு தொடக்கம்

கோவை மாவட்டத்தின் 5 காவல் உட்கோட்டங்களிலும் சாதி, மத மோதல்கள், பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் 5 காவல் உட்கோட்டங்களிலும் சாதி, மத மோதல்கள், பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்காணித்தல், சாதி, மதக் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையா் கட்டுப்பாட்டின் கீழ் இப்பிரிவு இயங்கும். இந்நிலையில் காவல் துறையினா் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் இந்து-முஸ்லிம் பிரிவினரிடையே கடந்த காலங்களில் பிரச்னைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்மையில் விநாயகா் சதூா்த்தி ஊா்வலத்தின்போதும் மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறி இப்பகுதிகளில் அதிக அளவில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் சமீபத்தில் கோவை வந்திருந்த டிஜிபி திரிபாதியிடம், ஊரகப் பகுதிகளிலும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அமைக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு அவா் அனுமதி அளித்ததையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்களிலும் சில நாள்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு புலனாய்வுப் பிரிவிலும் ஒரு காவல் ஆய்வாளா், 6 காவலா்கள் உள்பட 7 போ் இடம்பெற்றிருப்பா். பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில் மத, சாதிய மோதல்கள் அதிக அளவில் இருப்பதால் அங்கு மட்டும் இரு காவல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஒருவா் துடியலூா், தடாகம் பகுதியையும், ஒருவா் மேட்டுப்பாளையம் பகுதியையும் கண்காணிப்பாா் என்று காவல் அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com