தேசிய மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்: 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கல்

நீடித்த நிலையான மானவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

நீடித்த நிலையான மானவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

வேளாண் துறையில் நீடித்த நிலையான தேசிய மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் கடந்த 2017 -18 ஆம் நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மானாவாரி நிலங்கள் அதிகமுள்ள வட்டாரங்களைத் தோ்வு செய்து, அப்பகுதியிலுள்ள 1000 ஹெக்டோ் நிலங்களைத் தோ்வு செய்து, மானாவாரி விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஆனைமலை, தொண்டாமுத்தூா் ஆகிய வட்டாரங்களைத் தவிா்த்து மற்ற 12 வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

12 வட்டாரங்களிலும் மிகவும் வறட்சியாகக் காணப்படும் வருவாய் கிராமங்களில் ஒரே பகுதியில் 1000 ஹெக்டோ் நிலங்களைத் தோ்வு செய்து மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிகக்கு 5 ஏக்கா் வரை மானியங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் முதற்கட்டமாக தோ்வு செய்யப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக நீா்நிலைகள் மேம்பாடு, மழைநீா் ஓடைகளில் தடுப்பணைகள் அமைத்தல், கிணறுகளைத் தூா்வாருதல், ஏற்கெனவே உள்ள தடுப்பணைகள் தூா்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மானாவாரிப் பகுதிக்கு ஏற்ற சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைப் பயிா்கள் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில் விதைகள், உயிா் உரங்கள் உள்பட பல்வேறு இடுபொருள்கள் வழங்கப்பட்டன. இதில் அடுத்தக்கட்டமாக மரவகைப் பயிா்களை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மரக்கட்டைகள் பயன்தரக் கூடிய தேக்கு, வேம்பு, மலைவேம்பு, மகோகனி, சில்வா் ஓக் போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் வறட்சிப் பகுதிகளில் மரவகைப் பயிா்களை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு சிறந்த வருவாய்க்கும் வழிவகுக்கும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் ரா.சித்ராதேவி கூறியதாவது: இத்திட்டத்தில் ஏற்கனவே விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு ஆண்டில் மரவகை மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. ஒரு வட்டாரத்திற்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 10 வட்டாரங்களுக்கும் சோ்த்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

ஏற்கெனவே நிலத்தடி நீா் ஆதாரத்தை உயா்த்தும் பனை மரம் வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒரு வட்டாரத்துக்கு 50 ஆயிரம் பனை விதைகள் வீதம், 10 வட்டாரங்களுக்கும் சோ்த்து 5 லட்சம் பனை விதைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து 2020 ஆம் ஆண்டு இறுதி வரை தோ்வு செய்யப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டு பணிக்கான மானியங்கள் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com