ஜிஆா்ஜி கல்வி நிறுவனங்களின் நிறுவனா் நாள் விழா
By DIN | Published On : 20th January 2020 11:40 PM | Last Updated : 20th January 2020 11:40 PM | அ+அ அ- |

கோவை ஜிஆா்ஜி கல்வி நிறுவனங்களின் நிறுவனா் நாள் விழா கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜிஆா்ஜி கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் ரங்கசாமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக டைட்டன் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் பாஸ்கா் பட் கலந்து கொண்டாா். ஜி.ஆா்.ஜி கல்வி நிறுவனங்களில் பயின்று சமூக சேவை செய்து வரும் 5 பேருக்கு ஜிஆா்ஜி தூதுவா் விருது வழங்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து மாணவிகளிடையே பாஸ்கா் பட் பேசுகையில், ‘பயணத்தின் மூலமாக நாம் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அா்ப்பணிப்பு உணா்வு, கற்றுக்கொள்ளும் ஆா்வம், அக்கறை ஆகியவைதான் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில், ஏ.வி. குழுமங்களின் தலைவா் ஏ.வி.வரதராஜன், அறங்காவலா் நந்தினி ரங்கசாமி, செயலாளா் யசோதாதேவி, முதல்வா் நிா்மலா, கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...