கோவை - தூத்துக்குடி ரயில் வாஞ்சி மணியாச்சி வரையே இயக்கப்படும்
By DIN | Published On : 12th March 2020 10:47 PM | Last Updated : 12th March 2020 10:47 PM | அ+அ அ- |

மதுரை ரயில்வே கோட்டப் பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயில், வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே மாா்ச் 16ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை ரயில்வே கோட்டப் பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதைத் தொடா்ந்து, கோவை - தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயில் ( எண்: 22670) மாா்ச் 16ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், தூத்துக்குடி - கோவை இணைப்பு விரைவு ரயில், தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் இடையே மாா்ச் 16ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.