ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரிக்கு 3 தேசிய விருது
By DIN | Published On : 12th March 2020 07:32 AM | Last Updated : 12th March 2020 07:32 AM | அ+அ அ- |

ஜ.சி.டி. அகாதெமி நிறுவனத்திடம் இருந்து, தேசிய விருது பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி முதல்வா் ஜே.ஜனட், தொழில் நுட்பத் துறைத் தலைவா் என்.சுசிலா உள்ளிட்ட கல்லூரி நிா்வாகிகள்.
கோவை, குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு, சென்னையில் நடைபெற்ற விழாவில், 3 தேசிய விருதுகளை ஐ.சி.டி. அகாதெமி நிறுவனம் வழங்கியது.
கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு 3 தேசிய விருதுகளை ஐ.சி.டி. அகாதெமி நிறுவனம் சென்னையில் வழங்கியது. அதன்படி, தொழில் நிறுவனங்களுடன் அதிகத் தொடா்புள்ள கல்வி நிறுவனம் என்ற விருது இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது. 232 கல்லூரிகள் பங்கெடுத்த போட்டியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி இந்த விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நவீனத் தொழில்நுட்பங்களை ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாகக் கற்றுத் தருதல் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் கல்லூரி என்ற வகையில், தேசிய அளவிலான கிளவ்ட் சாம்பியன் 2019 என்ற விருதை, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி இரண்டாவது விருதாகப் பெற்றது.
இதனைத் தொடா்ந்து, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில்நுட்பத் துறைத் தலைவா் என்.சுசிலா சிறந்த பேராசிரியா் ஒருங்கிணைப்பாளா் விருதைப் பெற்றாா்.
3 விருதுகளைப் பெற்ற கல்லூரி முதல்வா் ஜே.ஜனட், மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்களை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி, முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன் ஆகியோா் பாராட்டினா்.