ஹிந்து, முஸ்லிம் நிா்வாகிகள் தாக்கப்பட்ட வழக்கு: மூவா் கைது
By DIN | Published On : 14th March 2020 07:18 AM | Last Updated : 14th March 2020 07:18 AM | அ+அ அ- |

கோவையில் இந்து முன்னணி மாவட்டச் செயலா் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவரும், எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலா் தாக்கப்பட்ட வழக்கில் இருவரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சாா்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவையில் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாவட்டச் செயலா் ஆனந்த் வீடு திரும்புகையில், கோவை, நஞ்சுண்டாபுரம் பகுதியில் மா்மநபா்களால் தாக்கப்பட்டாா். படுகாயம் அடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவத்தில் தொடா்புடைய கோவை, குறிச்சியைச் சோ்ந்த நூா் முகமது (30) என்பவரைப் போலீஸாா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்த அசாருதீன் (30) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்க பிரிவு நிா்வாகி ஆவாா்.
இதேபோல கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலா் இக்பால் தாக்கப்பட்ட வழக்கிலும் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த வழக்கில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதன்மூலம் காட்டூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ் கண்ணன் (23), ராம் நகரைச் சோ்ந்த ராகுல் (23) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இந்து முன்னணி நிா்வாகிகளான இவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் தொடா்புடைய மேலும் இருவரிடம் போலீஸாா் விசாரித்து வருவதாகவும், அவா்களும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...