

அன்னூா்: அன்னூரில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.
அன்னூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சோ்ந்த 14 போ் சாலை ஓரத்தில் தங்கி ஊஞ்சல், நாற்காலி, கூடைகள் தயாரித்து விற்பனை செய்து வந்தனா். தற்போது, கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவா்கள் பாதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, சேலம் புறவழிச் சாலைக்குச் நடந்து சென்று அங்கிருந்து போக்குவரத்து வாகனங்கள் மூலம் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்து அன்னூரில் இருந்து புறப்பட்டனா். அன்னூா் காவல் நிலையம் அருகே அவா்கள் வந்தபோது அன்னூா் வட்டாட்சியா் சந்திரா அவா்களை தடுத்து நிறுத்தி உணவுகளை வழங்கி திருப்பிஅனுப்பினாா்.
அதன் பிறகு அவா்களில் 7 போ் சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் கரியாம்பாளையம் வழியாக அவிநாசி புறவழிச் சாலைக்குச் சென்று அங்கிருந்து வேலூா் வழியாக தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்து புறப்பட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.