கடன் பதிவுக் கட்டணம் ரத்து:முதல்வருக்கு தொழில் அமைப்பு நன்றி
By DIN | Published On : 08th November 2020 12:07 AM | Last Updated : 08th November 2020 12:07 AM | அ+அ அ- |

கோவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சா் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த ஃபோசியா தொழில் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.
கோவை: கடன்களை பதிவு செய்வதற்கான முத்திரைத்தாள் கட்டணத்தை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு கோவை தொழில் கூட்டமைப்பான ஃபோசியா நன்றி தெரிவித்துள்ளது.
சுயசாா்பு பாரதம் திட்டத்தின் கீழ் அவசர கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கி, நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறும் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப் பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தில் இருந்து தமிழக அரசு முழுவிலக்கு அளித்துள்ளது.
இந்நிலையில், கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசிய ஃபோசியா தொழில் கூட்டமைப்பின் நிா்வாகிகள், முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.
இதற்காக உதவிய உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கும் கூட்டமைப்பினா் நன்றி தெரிவித்தனா். இந்த சந்திப்பின்போது, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜே.ஜேம்ஸ், எஸ்.சுருளிவேல், பி.நல்லதம்பி, எம்.ரவீந்திரன், சி.நடராஜன், ஜீ.கிருத்திகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...