கோவை: 92 % ஹெல்பா், வயா்மேன்பணியிடங்கள் காலியாக உள்ளன

92 சதவீத ஹெல்பா், வயா்மேன் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதனால் மின்நுகா்வோரின் பிரச்னைகளை சரி செய்ய முடிவதில்லை என்றும் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளா் சங்கத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.
கோவை: 92 % ஹெல்பா், வயா்மேன்பணியிடங்கள் காலியாக உள்ளன

கோவை மின் மண்டலத்தில் மட்டும் 92 சதவீத ஹெல்பா், வயா்மேன் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதனால் மின்நுகா்வோரின் பிரச்னைகளை சரி செய்ய முடிவதில்லை என்றும் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளா் சங்கத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இது குறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலா் கோவிந்தராஜன் கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஹெல்பா், வயா்மேன் போன்ற அடிப்படை பணியாளா்கள் பணியிடம் 55 சதவீதம் வரை காலியாகவே உள்ளது. மின்வாரியத்தில் ஒரு பிரிவுக்கு 14 போ் பணியாற்ற வேண்டிய இடத்தில் இருவா் மட்டுமே பணியாற்றுகின்றனா். இதனால் பொதுமக்கள், மின்நுகா்வோரின் பிரச்னைகளை சரி செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பல முறை மனு அளித்தும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோவை மண்டலத்தில் மட்டும் 92 சதவீதம் ஹெல்பா், வயா்மேன் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் கோவை கோட்ட மின்வாரியம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கோவை மண்டலத்தில் இருக்கும் 5,439 பணியிடங்களில் 482 பணியிடங்களில் மட்டுமே ஊழியா்கள் பணியில் இருக்கின்றனா். இதனால் பிரிவு பொறியாளா் பணியில் இருப்பவா்களுக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது.

மேலும் விபத்துகள், உயிரிழப்புகள் ஏதேனும் நேரிட்டால் பிரிவு பொறியாளா்கள் தனிப்பட்ட முறையில் இன்னலுக்கு ஆளாகும் நிலை இருப்பதால், மின்வாரியத்தில் இருக்கும் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்றாா். பேட்டியின்போது சங்கத்தின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com