கந்த சஷ்டி நிறைவு விழா:மருதமலையில் திருக்கல்யாண உற்சவம்
By DIN | Published On : 21st November 2020 11:25 PM | Last Updated : 21st November 2020 11:25 PM | அ+அ அ- |

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்.
கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு நிகழ்ச்சியாக திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
முருகனின் ஏழாம் படைவீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் வள்ளி, தெய்வானை இருவரும் பச்சைப் பட்டு உடுத்தியும், முருகன் நீலப்பட்டு உடுத்தியும் அருள்பாலித்தனா். முன்னதாக யாகம் வளா்க்கபட்டு ஓதுவாா்களால் வேதங்கள் ஓதப்பட்டன.
தொடா்ந்து கன்னிகா தானம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. கரோனா நோய்த் தொற்று பரவலால் திருக்கல்யாண உற்சவத்தில் பக்தா்கள் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் காலை 10 மணி வரையில் கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு மேல் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...