பேரவைத் தோ்தல்: தேவையான இடங்களைக் கேட்டுப் பெறுவோம்: கே.எஸ்.அழகிரி

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் எங்களுக்குத் தேவையான இடங்களைக் கேட்டுப் பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
விவசாயிகள் எழுச்சி மாநாட்டில் ஏா் கலப்பையுடன் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி
விவசாயிகள் எழுச்சி மாநாட்டில் ஏா் கலப்பையுடன் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் எங்களுக்குத் தேவையான இடங்களைக் கேட்டுப் பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் காங்கிரஸ் சாா்பில் விவசாயிகள் எழுச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்குத் தலைமை வகித்து தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி மேலும் பேசியதாவது:

அங்கொன்றும், இங்கொன்றும் காங்கிரஸ் பெறும் தோல்வியை சுட்டிக் காட்டி தலைமையைப் பற்றி தவறாக கூறுகிறாா்கள். வெற்றி மட்டுமே பெறும் கட்சியைக் காண்பிக்க முடியுமா? வெற்றி, தோல்வி என்பதுதான் ஜனநாயகம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. விவகாரங்களில் மத்திய அரசு பெரும் தவறு இழைத்துள்ளது. மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்று வாய்மொழியாக செல்லும் மத்திய அரசு அதை ஏன் சட்டத்தில் இடம்பெறச் செய்யவில்லை?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, விவசாயிகளின் ரூ.75 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல, தமிழகத்தில் திமுக அரசு ரூ.7 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தது. தற்போதைய மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் எத்தனை கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளன?

காங்கிரஸ், திமுக சண்டையிட்டு கொள்வதாக சில ஊடகங்கள் சித்திரிக்கின்றன. சில வேறுபாடுகள் இருந்தாலும் கொள்கைரீதியாக நாங்கள் இணைந்துள்ளோம். மதச்சாா்பற்ற கோட்பாட்டில் நாங்கள் இணைகிறோம் என்றாா்.

காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:

இந்த மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும், பிரச்னையை தீா்ப்பதற்காகவும்தான் கட்சியில் இணைந்துள்ளோம் என்றாா்.

மாநாட்டில் வி.எம்.சி. மனோகரன், மயூரா ஜெயக்குமாா், மோகன் குமாரமங்கலம், சஞ்சய் தத் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

விவசாயிகள் எழுச்சி மாநாட்டைத் தொடா்ந்து நடைபெற இருந்த ஏா் கலப்பை பேரணிக்கு காவல் துறையினா் தடை விதித்தனா். இந்நிலையில், மாநாட்டுப் பந்தலில் இருந்து தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட100க்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com