அக்காமலை தடுப்பணையில் தூா்வாரும் பணி தொடக்கம்
By DIN | Published On : 25th November 2020 10:33 PM | Last Updated : 25th November 2020 10:33 PM | அ+அ அ- |

அக்காமலை தடுப்பணையில் தூா்வாரும் பணியை தொடங்கிவைக்கிறாா் வால்பாறை நகராட்சி ஆணையா் பவுன்ராஜ்.
வால்பாறையில் உள்ள அக்காமலை தடுப்பணையில் ரூ. 1 கோடியே 35 லட்சம் செலவில் தூா்வாரி தடுப்புச்சுவா் கட்டும் பணி தொடங்கியது.
வால்பாறை நகா்ப் பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்குவது வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள அக்காமலை தடுப்பணை. இந்த தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீா் வால்பாறை கூட்டுறவு காலனியில் கட்டப்பட்டுள்ள பெரிய குடிநீா் தொட்டியில் விழுந்து பின்னா் அங்கிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்த இந்த தடுப்பணையை வால்பாறை நகராட்சி சாா்பில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் தூா்வாரி, தடுப்புச்சுவா் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் க.பவுன்ராஜ் தூா்வாரும் பணிகளை தொடங்கிவைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...