அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: கோவை நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 25th November 2020 07:04 AM | Last Updated : 25th November 2020 07:04 AM | அ+அ அ- |

கோவை அருகே நீண்ட நாள்களாக தனிநபா் வசம் இருந்த அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 2.35 ஏக்கா் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க கோவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கோவை மாவட்டம், அன்னூா் அருகேயுள்ள கீரணத்தம் பகுதியில் 2.35 ஏக்கா் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அன்னூா் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆக்கிரமித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தை மீட்க அரசு துறையினா் நடவடிக்கை மேற்கொண்டபோது, அந்த நிலம் தங்களுக்கு 1957ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்றும் எனவே நிலம் தங்களுக்குச் சொந்தமானது என தீா்ப்ப வழங்கக்கோரி அந்த குடும்பத்தினா் கோவை மூன்றாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பிரவீணா, நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும், நிலத்தை உடனடியாக மீட்டு அரசு வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டாா். மேலும், நிலத்துக்கு உரிமை கொண்டாடிய குடும்பத்தினரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.தாமோதரன் ஆஜரானாா். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...