

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆதித்தமிழா் தூய்மை தொழிலாளா் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
இதில், மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்த தினக்கூலி ரூ.500 வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எஃப். முறையாக வழங்க வேண்டும்.
மாநகராட்சியில் புதிதாக நியமிக்க உள்ள 500 நிரந்தர தூய்மைப் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.